4 தொழிலாளர் விரோத சட்டங்களை உடனே திரும்ப பெறுக! இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
13 May 2026, 12:08 am
<p><strong>4 தொழிலாளர் விரோத சட்டங்களை உடனே திரும்ப பெறுக! இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், மே 12- இராமநாதபுரம் அரண் மனை அருகில் தொழிலாளர் விரோத சட்ட விதிகளை உடனே ரத்து செய்யக் கோரி யும், தொழிலாளர் உரிமை களைப் பாதுகாக்க கோரி யும் சிஐடியு, ஏஐடியுசி, எல்.பி.எப், யுடியுசி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை வகித்தார. சிஐ டியு மாவட்டத் தலைவர் எம். சிவாஜி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.கே. ராஜன், எல்.பி.எப் மாவட்டச் செயலாளர் ந.மலைக் கண்ணு, யுடியுசி மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் ரெ.குருவேல், சிஐ டியு மாவட்ட பொருளாளர் வி.பாஸ்கரன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ. அய்யாதுரை, வாசு தேவன், மலைராஜ், மாவட் டத் துணைச் செயலாளர் க.தனுஷ்கோடி, பஞ்சாலை சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வெங்கடசுப்பிரமணி யன், ஏஐடியுசி நிர்வாகி எஸ்.சுப்பிரமணி, இராமநாதபுரம் தாலுகாச் செயலாளர் என்.வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.</p>
