கால்வாயில் தனியார் மின் கம்பங்களால் மராமத்து பணி செய்வதில் சிரமம்
7 Jul 2026, 10:46 pm
<p><strong>கால்வாயில் தனியார் மின் கம்பங்களால் மராமத்து பணி செய்வதில் சிரமம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 7- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் திங்கட்கிழமை மக் கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகை நீர்வரத்து கால்வாயில் தனி யார் மின் கம்பங்கள் அமைப் பதால் கால்வாயை மரா மத்து பணி செய்வதில் சிரமம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மாவட்ட ஆட்சி யரிடம் புகார் மனு அளித்தது. இந்த மனு மாவட்டச் செயலா ளர் ரெ.குருவேல் தலைமை யில் அளிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட் டம் ஆர்.எஸ்.மங்கலம் வட் டம் கொட்டக்குடி மற்றும் கொழுவூர் ஆகிய கிராமங்க ளில் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை அருகில் உள்ள ஆட்டங்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் உப மின் நிலையம் மூலம் விநி யோகிக்க கம்பங்கள் நடப் பட்டு மின் வலைத்தளம் அமைக்கும் பணி நடைபெறு கிறது. அந்த மின் வழி தடங்க ளுக்கான கம்பங்களை வைகை நீர்வரத்து கால்வா யிலும், கண்மாய் பகுதிகளி லும் ஊன்றப்பட்டுள்ளது. மேலும் தனியார் விவசாய நிலங்களிலும் கம்பங்கள் நடப்படுகிறது. ஆட்டங்குடி, மருதூர், குணங்குளம், குயவனேந் தல் உட்பட்ட பகுதி கிராமங் கள் பாசனம் வசதி பெறக் கூடிய கால்வாய் மற்றும் கண்மாய்களில் மின் கம்பங் கள் அமைப்பதால் மராமத்து பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்படும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர், தனியார் நிறுவன பிரதிநிதிகளையும், விவசாயப் பிரதிநிதிகளை யும் அழைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் நா. கலையரசன், எம்.ராஜ் குமார், இ.கண்ணகி, மாவ ட்டக் குழு உறுப்பினர் பி. செல்வராஜ், கிராமப் பொது மக்கள் 50க்கும் மேற்பட் டோர் உடனிருந்தனர்.</p>
