தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் நடவடிக்கையில் காவலர் உயிரிழப்பு

15 Jun 2026, 10:56 pm
மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் நடவடிக்கையில் காவலர் உயிரிழப்பு
<p><strong>மணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல் நடவடிக்கையில் காவலர் உயிரிழப்பு</strong></p><p>​​​​​​​அமைச்சர் நேரில் அஞ்சலி இராமநாதபுரம், ஜூன் 15- இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டி னம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக் டரை பறிமுதல் செய்து காவல்நிலை யத்திற்கு கொண்டு சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தலைமைக் காவலர் உயி ரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை, உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறை யினர் மணல் கடத்தலில் பயன்படுத்தப் பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர். அந்த டிராக்டரை தேவிப்பட்டினம் காவல்நிலை யத்திற்கு தலைமைக் காவலர் எம்.மகேஷ்குமார் (41) ஓட்டி சென்று கொண்டி ருந்தார். அப்போது இராமநாதபுரம்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில், காவலர் மகேஷ்குமா ரின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக் கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகேஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இராம நாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் வைக்கப்பட்டு பின்னர் உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற் றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் மருத்து வமனைக்கு சென்று உடலுக்கு மலர் அஞ் சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் ஜி.சந்திஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.