தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.314. 31 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு

21 Jun 2026, 11:47 pm
ரூ.314. 31 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு
<p><strong>ரூ.314. 31 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகள் திறப்பு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 21- இராமநாதபுரம் மாவட் டம், கடலாடி வட்டம், சிக் கல் அரசு மேல்நிலைப்பள்ளி யில் சனிக்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக் கல் நாட்டப்பட்டதுடன், முடி வுற்ற அரசு கட்டிடங்கள் காணொலிக் காட்சி வாயி லாக திறந்து வைக்கப்பட் டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபா கரன் முன்னிலை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத் தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, ரூ.49.95 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.264.36 லட்சம் மதிப்பிலான முடி வுற்ற கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வேளா ண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கமுதி ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளா கத்தில் ரூ.24 லட்சம் மதிப்பீட் டில் விவசாயிகள் ஓய்வறை அமைக்கும் பணிக்கும், போகலூர் ஊராட்சி ஒன்றி யம் எட்டிவயல் ஒருங்கி ணைந்த மிளகாய் வணிக வளாகத்தில் ரூ.24.95 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகள் ஓய்வறை அமைக்கும் பணிக் கும் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி னார். மேலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மகிண்டி கிரா மத்தில் ரூ.45 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட சுகாதார துணை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சி ஒன்றி யம் மஞ்சூர் கிராமத்தில் ரூ. 8.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையலறைக் கட்டடம், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியம் சிரகிக் கோட்டை கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட பஞ்சாயத்து அலுவல கக் கட்டடம் மற்றும் முது குளத்தூர் ஊராட்சி ஒன்றி யம் விளக்கனேந்தல் கிரா மத்தில் ரூ.16 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்ட அங்கன் வாடி மையக் கட்டடம் ஆகி யவற்றை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.164.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட 7 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வகுப்பறை களை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன், கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) ததிவ்யாகம், மாவட்ட முத ன்மைக் கல்வி அலுவலர் எல்.ரெஜினி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், உதவி செயற்பொறியாளர் ரவீந்தி ரன் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.