சாலையோர வியாபாரிகளை அராஜகமாக வெளியேற்றுவதா? இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை சிஐடியு முற்றுகை!
5 Jun 2026, 1:45 am
<p><strong>சாலையோர வியாபாரிகளை அராஜகமாக வெளியேற்றுவதா? இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை சிஐடியு முற்றுகை!</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 4 - சாலையோர வியாபாரிகளை முன்னறி விப்பின்றி அகற்றிய நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து, சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தினர், இராமநாத புரம் நகராட்சி அலுவலகம் முன்பு வியா ழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இராமநாதபுரம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரம் செய்து வந்த சாலையோர வியா பாரிகள் மற்றும் பெண்கள் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நகராட்சி நிர்வாகத்தால் அராஜக மாக அகற்றப்பட்டனர். இதனை எதிர்த்து, சிஐடியு இராமநாதபுரம் மாவட்ட சாலை யோர வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சாலையோர வியாபாரி கள் பாதுகாப்பு தொடர்பான 2014-ஆம் ஆண்டு சட்டம் முறையாக அமல்படுத்தப் படாததையும், முன்னறிவிப்பின்றி வியாபாரி கள் அகற்றப்பட்டதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டி, நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை தவறு எனத் தீர்ப்பளித்தது. மேலும், அகற்றப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்கி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறி வுறுத்தியது. ஆனாலும், கடந்த மே 15 அன்று மீண்டும் முன்னறிவிப்பின்றி சாலையோர வியாபாரிகளை நகராட்சி நிர்வாகம் வெளி யேற்றியது. இதனைக் கண்டித்தே, சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்கத்தினர் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் தலைமையிலான இந்தப் போராட்டத்தை யடுத்து, மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபா கரன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கை களை கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட பகுதி களை நேரில் ஆய்வு செய்து, சாலையோர வியாபாரிகளுக்கு உரிய இடம் ஒதுக்க நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்தார். முன்னதாக முற்றுகைப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம். சிவாஜி, மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ. சந்தானம், மாவட்டப் பொருளாளர் வி. பாஸ்கரன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் வி. ஆலடி ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் இரா. முத்துவிஜயன், மாவட்டப் பொருளாளர் என்.பி.செந்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரெ. குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. காசிநாததுரை, எம். ராஜ்குமார், தி. ராஜா, முறைசாராத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பசலை நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
