மினி பேருந்துகளால் மக்களுக்கு இடையூறு ஆட்சியர் தலையிட கோரிக்கை
12 Jun 2026, 9:38 pm
<p><strong>மினி பேருந்துகளால் மக்களுக்கு இடையூறு ஆட்சியர் தலையிட கோரிக்கை</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 12- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் உள்ளே பேருந்து செல்லும் இருபுறமும் மினி பேருந்துகளை நிறுத்திக் கொண்டு அரசு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மினி பேருந்துகளுக்கு தனி இடம் ஒதுக்கி தர வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு என்று தெரிந்தும் பேருந்து செல்லும் தளத்தில் மினி பேருந்துகளை நிறுத்தும் மினி பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
