இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்சார் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை
26 Sept 2026, 8:52 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்சார் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

இராமநாதபுரம், செப்.26-இராமேஸ்வரம் நகரில் அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு மற்றும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஜி.விக்ரமன் தலைமை வகித்தார். மாவட் டத் துணைத் தலைவர் கே.தனபால் முன்னிலை வகித் தார். மாவட்டப் பொருளாளர் டி.மாரிமுத்து வரவேற்றார்.

மாநிலத் துணைச் செயலாளர் வி.மதி தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரசேகரன் வேலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கச் செயலாளர் கே.முத்து துரைச்சாமி, இராமேஸ் வரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.கே.மயில்சாமி, செயலாளர் எஸ்.ஹரிஹரன்ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் என்.முத்துஅமுதநாதன் நிறைவுரையாற்றினார்.தொடர்ந்து, ‘குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும்விசாரணைகள்’ என்ற தலைப் பில் மூத்த வழக்கறிஞர்எஸ்.ஜே.சேக் இப்ராஹிம் கருத்துரையாற்றினார். கே.தமீம் அன்சாரி நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் புதிய நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட் டனர். தலைவராக எஸ்.சந் திரசேகரன், செயல் தலைவராக கே.தனபால், செயலாளராக டி.மாரிமுத்து, பொருளாளராக எஸ்.கே.ஜி.விக்ரமன், துணைத் தலைவராக பசுமலை, துணைச் செயலாளராக கே.தமீம் அன்சாரி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

தீர்மானங்கள்

இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் நுகர் வோர் நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. வழக்கறிஞர்களுக்கென தனிச்சட்டம் இயற்ற வேண் டும். வழக்கறிஞர் குடும்ப நலநிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்சார் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். நீதிமன் றங்களில் அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.