முந்தய பக்கம்

அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

5 Nov 2026, 10:40 pm
அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
<p>அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் துணைத் தலைவர் பாலுசாமி தலைமையிலும், மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி, மெய்ய சக்தி முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதின் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனிஸ்டர், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாரமலை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அலுவலர் சங்க மாநில நிர்வாகி பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஜாக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லிங்கதுரை நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram