இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம்
5 Oct 2026, 11:03 pm
<p><strong>இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம்</strong></p><p>இராமநாதபுரம், அக். 5 –இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 இராமநாதபுரம் மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இராமநாதபுரம் மீனவர்கள் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இராமநாதபுரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வரும் 16ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் இராமநாதபுரத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச்செல்லாமல் கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 46 படகுகளுக்கு நிவாரணம் மற்றும் மானிய விலையில் டீசல் கோரியும், வரும் வியாழக்கிழமை மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
