தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயறு சாகுபடி, மண்வளப் பாதுகாப்பில் கவனம் செலுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

5 Jul 2026, 9:28 pm
பயறு சாகுபடி, மண்வளப் பாதுகாப்பில் கவனம் செலுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
<p><strong>பயறு சாகுபடி, மண்வளப் பாதுகாப்பில் கவனம் செலுத்த விவசாயிகளுக்கு அறிவுரை</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 5- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில், தமிழ்நாடு அரசு வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ், குயவன்குடி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் “கிசான் கோஷ்டி” வயல் தின விழா மற் றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய வேளாண்மைத் துறை அலுவலர்கள், காலநிலை மாற்றம் மற்றும் மண் வளக் குறைபாட்டை கருத்தில் கொண்டு, நெல் சாகுபடியுடன் பயறு வகைப் பயிர்களையும் அதிகளவில் சாகுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு அறி வுறுத்தினர். பயறு சாகுபடி மண்ணில் இயற்கையாக நைட்ரஜன் சத்தை அதி கரிப்பதுடன், விவசாயிகளின் வருமா னத்தையும் உயர்த்த உதவும் என தெரி வித்தனர். மேலும், இயற்கை வேளாண்மை முறை களைப் பின்பற்றுதல், மண் மற்றும் நீர் மாதிரி களை ஆய்வு செய்து மண்வள அட்டை யின் அடிப்படையில் உரங்களைப் பயன் படுத்துதல், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை முறையாகக் கையா ளுதல் ஆகியவை நிலையான வேளா ண்மைக்கு அவசியம் என வலியுறுத்தப் பட்டது. தென்னை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, “தென்னை டானிக்” வேர்வழி நுண்ணூட்டம் வழங்கும் முறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்க லைக்கழகத்தின் விதை அமிர்தம் மூலம் விதை நேர்த்தி செய்யும் முறை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செய்முறை விளக்கத்து டன் எடுத்துரைக்கப்பட்டன. மேலும், மண்புழு உரம் தயாரித்தல், பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்தல், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் உள் ளிட்ட நவீன மற்றும் நிலையான வேளாண் தொழில்நுட்பங்களும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் மற்றும் ஆத்மா திட்டத்தின் பயன்களை முழு மையாகப் பயன்படுத்தி, அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல் மற்றும் கூடுதல் வருமானம் பெற வேண்டும் என வேளாண்மைத் துறையினர் கேட்டுக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.