தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்க! இராமநாதபுரம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

29 May 2026, 10:10 pm
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்க!   இராமநாதபுரம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்க! இராமநாதபுரம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

இராமநாதபுரம், மே 29- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே 29 வெள்ளிக்கிழமையன்று விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலை மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் வேளாண்மைத்துறையில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவசாயி களுக்கு எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, கடந்த மாத விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப் பட்ட மனுக்கள் மீது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் தொ டர்பாகவும், நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை தொடர்பாகவும் அலுவலர்கள் விளக்கிக்கூறினர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதி கள் வட்டார வாரியாக தங்கள் பகு தியில் உள்ள வேளாண் தொ டர்பான கோரிக்கைகளையும், தேவைகளையும் தெரிவித்தனர்.

அவற்றில் கால்வாய் தூர்வாரு தல், மின் இணைப்பு, கண்மாய்க ளில் உள்ள கரைகளை மேம் படுத்துதல் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வர் எம்.முத்துராமு பேசியதாவது: தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் வாக்குறுதியின் படி ஐந்து ஏக்கர் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத கடன் தொகையை ரத்து செய்ய வேண்டும்.

நீண்ட நாட்க ளாக உள்ள விவசாய பயிர்க் கடனை ரத்து செய்ய தமிழக அரசு க்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

கொள்முதல் நிலையத்தில் உள்ள சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

கொள்முதல் நிலை யத்தில் உள்ள முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் ஆலை அமைக்க வேண்டும்.

முது குளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி ஆகிய பகுதிகளில் சென்றாண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு வறட்சி மற்றும் இன்சூரன்ஸ் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க வழிவகை செய்ய வேண்டும்.

திரு வாடனையில் அரசு மருத்துவ மனை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதை உடனே திறந்து கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகள் தெரிவித்த கோ ரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பதிலளிக்கை யில், விவசாயிகளின் கோரிக்கை கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை உரிய நட வடிக்கை மேற்கொள்ள அறி வுறுத்தியதுடன், விவசாயிகள் வழங்கும் ஒவ்வொரு மனுவின் மீதும் துறை சார்ந்த அலுவலர் கள் காலதாமதமின்றி உரிய நட வடிக்கை மேற்கொண்டு மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொ டர்பாக மனுதாரருக்கு காலதாமத மின்றி தெரிவித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் விவசாயி கள் தங்களுக்கு தனித்துவமான அடையாள எண் பெறுவதற்கு வேளாண்மைத்துறை அலுவல கத்தை அணுகி பயன்பெற்றிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் வ.சங்கரநாரா யணன் , வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாஸ்கரமணி யன், அரசு அலுவலர்கள், விவசாயி கள் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.