தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் குறைதீர் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

25 Jun 2026, 11:16 pm
பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் குறைதீர் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் குறைதீர் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

இராமநாதபுரம், ஜூன் 25- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா. சிவகுரு பிரபாகரன் தலைமையில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எம்.முத்துராமு பேசுகையில், தேர்தல் வாக்குறுதியின்படி 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயி களின் பயிர் கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சத வீத கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார்

. மேலும், நீண்டகாலமாக நிலு வையில் உள்ள பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத் தார்.

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீட்டு தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவசாய சங்க மாவட்டச் செய லாளர் வி.மயில்வாகணன் பேசுகை யில், நீர்வழித்தடங்கள் மற்றும் சாலையோரங்களில் பரவி உள்ள கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், 2018– 19ஆம் ஆண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் பயிர் காப்பீடு செய்த மீனங்குடி மற்றும் நெடுங் குளம் கிராம விவசாயிகளுக்கு, நீதி மன்ற உத்தரவு இருந்தும் காப்பீட்டு தொகை வழங்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பல்வேறு அர சுத் திட்டங்கள் குறித்து விவசாயி களுக்கு விளக்கமளித்தனர்.

கடந்த மாத குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக் கைகள் குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது. விவசாயிகள் கால்வாய் தூர்வா ருதல், மின் இணைப்பு, கண்மாய் கரை மேம்பாடு, பயிர் காப்பீடு மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தினார்.

மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழையளவு 827 மி.மீ. ஆகும். 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 190 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 140 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது. இது சராசரியை விட 26 சதவீதம் குறைவாகும். ஜூன் மாதத்திற்கான இயல்பான மழையளவு 14 மி.மீ. ஆக இருந்த நிலையில், ஜூன் 23 வரை 6.17 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

2026–27ஆம் ஆண்டில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாகவும், மாவட்ட வேளாண்மை விரி வாக்க மையங்களில் 638 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகள் இருப்பில் உள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது.

மேலும், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 3,003 மெட்ரிக் டன், டிஏபி 637 மெட்ரிக் டன், பொட்டாஷ் 218 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 2,483 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 109 மெட்ரிக் டன் இருப்பில் உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாஸ்கர மணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜீனு, இராம நாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜ லெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) வாசுகி உள்ளிட்ட அதிகாரி கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.