தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குப்பை இல்லா இராமேஸ்வரத்தை உருவாக்க வேண்டும் அறிவியல் இயக்க இராமநாதபுரம் மாவட்ட மாநாடு கோரிக்கை

27 Dec 2025, 4:49 pm
குப்பை இல்லா இராமேஸ்வரத்தை உருவாக்க வேண்டும் அறிவியல் இயக்க இராமநாதபுரம் மாவட்ட மாநாடு கோரிக்கை
<p><strong>குப்பை இல்லா இராமேஸ்வரத்தை உருவாக்க வேண்டும் அறிவியல் இயக்க இராமநாதபுரம் மாவட்ட மாநாடு கோரிக்கை</strong></p> <p>இராமநாதபுரம், டிச.27- இராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக் &nbsp;கத்தின் 18-வது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் ஜே.ஜே.லியோன் தலைமையில் நடைபெற்றது. சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி தாளாளர் தேவ மனோகரன் மார்டின் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.பரமேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டை மாநிலச் செயலாளர் எஸ்.பரமசிவம் துவக்க உரையாற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து இராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் ஆர்.தமிழரசி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பி யல் துறை இணைப் பேராசிரியர் எம்.கரு ணாகரன், சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி &nbsp;முதல்வர் ஏ.ஆனந்த், ஆசிரியர் ச.துரைப் &nbsp;பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். மாவட்ட துணைச் செயலாளர் எம்.சசிக் &nbsp;குமார் தலைமையிலும், மாவட்ட துணைத் &nbsp;தலைவர் எம்.வின்சென்ட் வீரு முன்னிலை யிலும் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பால கிருஷ்ணன், &ldquo;அறிவியலை அறிவோம், அறி வியலால் இணைவோம்&rdquo; என்ற தலைப்பில் &nbsp;கருத்துரை ஆற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜீவா னந்தம் தலைமையிலும், பரமக்குடி வட்டத் &nbsp;தலைவர் கே.பி.ராமமூர்த்தி முன்னிலையி லும் மூன்றாம் அமர்வு நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் டி.நவநீத கிருஷ்ணன் துளிர் இல்ல ஒருங்கிணைப்பா ளர்களை பாராட்டி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ராஜேஸ்வரி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் சி.ஜெரோம், வெ.விஜயராம், மு. வைஷ்ணவி ஆகியோர் தலைமையில் பிரதி நிதிகள் மாநாடு நடைபெற்றது. மாவட்டச் &nbsp;செயலாளர் கு.காந்தி வேலை அறிக்கை யை தாக்கல் செய்தார். மாவட்ட பொருளா ளர் எம்.பாலமுருகன் வரவு&ndash;செலவு அறிக் கையை சமர்ப்பித்தார். மாவட்ட துணைச் செயலாளர் டி.சுரேந்திர பாரதி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வி.செந்தில்ராம், எம்.கே.சேது ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில &nbsp;செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜீவானந்தம் நிறைவுரையாற்றினார். எச்.சாகுல் மீரா நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் மாநாட்டில் தலைவராக ஜே.ஜே.லியோன், செயலாளராக எஸ்.ஜீவா னந்தம், பொருளாளராக எச்.சாகுல் மீரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் இராமேஸ்வரத்தில் உள்ள குப்பை களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மறுசுழற்சி செய்து, குப்பை இல்லாத இராமேஸ்வரம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் பத்தாயிரம் பனை மரங்கள் நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.