தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

7 Jun 2026, 10:33 pm
மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

இராமநாதபுரம், ஜூன் 7- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் வி.கே.ராஜீவ், 9 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.1,01,800 மதிப்பில், மொத்தம் ரூ.9,16,200 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் வாகனங்களை வழங்கினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தார்.

அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் ஏஏஒய் வகை குடும்ப அட்டை வழங்குதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கு தல், உதவித்தொகை வழங்கும் நடைமுறையை எளி மைப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூல மாக வழங்க நடவடிக்கை எடுப்பது, குடிமனை பட்டா வழங்குதல் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங் களை எளிதில் அணுகக்கூடிய வகையில் தரைத்தளத்தில் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.