தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் முறையாக இருப்பதில்லை

6 Jul 2026, 9:38 pm
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் முறையாக இருப்பதில்லை
<p><strong>மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் மருத்துவர்கள் முறையாக இருப்பதில்லை</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 6- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபா கரனிடம் புகார் மனு அளிக் கப்பட்டது. மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் தலைமை யில் அளிக்கப்பட்ட மனு வில், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் மாற்றுத் திற னாளிகளுக்காக புதன் மற் றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு இருமுறை சிற ப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டு வருவதாகவும், ஆனால் முகாமில் மருத்துவர்கள் முழு நேரமும் இருப்ப தில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கமுதி மற்றும் வாலிநோக்கம் பகுதிகளைச் சேர்ந்த பார் வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் காலை 11.30 மணியளவில் முகாமிற்கு சென்றபோது மருத்துவர்கள் அங்கு இல்லை. இதுகுறித்து மருத் துவப் பணியாளர்களிடம் கேட்டபோது, “மருத்துவர் கள் இனி வரமாட்டார்கள்; புதன்கிழமை வாருங்கள்” என்று தெரிவித்ததாக மனு வில் கூறப்பட்டுள்ளது. முகாம் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் நிலை யில், அந்த நேரம் வரை மருத் துவர்கள் பணியில் இருப் பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என் றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரி களை உடனடியாக அழை த்து, மருத்துவர்கள் பிற்பகல் 1 மணி வரை முகாமில் பணி யில் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மனு அளிக்கும் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங் கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வி.முருகன், கமுதி தாலுகா பொருளாளர் ஸ்டா லின், மாவட்ட துணைச் செய லாளர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.