முந்தய பக்கம்

பதிவாளரை மாற்றக்கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு போராட்டம்

30 Oct 2026, 10:18 pm
பதிவாளரை மாற்றக்கோரி  கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு போராட்டம்
<p><strong>பதிவாளரை மாற்றக்கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு போராட்டம்</strong></p><p>இராமநாதபுரம், அக்.30-பதிவாளரை மாற்றக்கோரி இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பாக தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.இதுகுறித்து மாவட்ட தலைவர் இல.விஜய் ராமலிங்கம், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், லோகநாயகி பணி விடுப்புஆணையை ரத்து செய்துமீளப்பணியமர்த்த வேண்டும், பதிவாளர் அலுவலகத்தில் பார்வையாளர் நேரம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு கொள்கைகளுக்கு முரணாகவும் துணை விதிகளுக்கு மாறாகவும் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை கீழ்நோக்கி கொண்டு செல்லும் பதிவாளரை மாற்றக் கோரியும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram