அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு
27 May 2026, 10:46 pm
<p><strong>அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு</strong></p><p>இராமநாதபுரம், மே 27- இராமநாதபுரம் மாவட் டத்தில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொ துத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சிபெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களின் தலைமையாசிரி யர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட் டம், இராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது மக ளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க் கிழமையன்று பள்ளிக் கல்வித் துறையின் மூலம் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தலைமையாசிரி களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி னார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி மற்றும் அலுவ லர்கள் பங்கேற்றனர். </p>
