தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூன் 28 இராமநாதபுரத்தில் சிறுவர்களுக்கு கலைப்போட்டிகள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

19 Jun 2026, 10:27 pm
ஜூன் 28 இராமநாதபுரத்தில்  சிறுவர்களுக்கு கலைப்போட்டிகள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு
<p><strong>ஜூன் 28 இராமநாதபுரத்தில் சிறுவர்களுக்கு கலைப்போட்டிகள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு</strong></p><p>இராமநாதபுரம்,ஜூன் 19- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் மா.சிவகுரு பிரபாகரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக 202செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக 2025-2026 ஆம் நிதி யாண்டில் 5-8, 9-12, 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு 9-12, 13-16 ஆகிய வயது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் 28.06.2026 ஞாயிற்றுக் கிழமை அன்று டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி, வெளிப்பட்டிணத்தில் வயதுவகை நடைபெறவுள்ளது. குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் போட்டிகள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. குழு வாக போட்டியில் பங்கு பெற அனுமதி யில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமி டம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படு வார்கள். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடி யாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயி லாட்டம், புலியாட்டம். தப்பாட்டம் (பறை யாட்டம் ) மலை மக்கள் போன்ற பாரம் பரிய கிராமிய நடனங்கள் அனு மதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்க ளுக்கான ஓவியத்தாள்கள் மட்டுமே வழங் கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரை யப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் வெற்றி பெறும் 9-12, 13-16 வயதுவகை சிறார்க ளுக்கிடையே முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத் துறையின் மதுரை மண்டல அலுவல கத்தின் தொலைபேசி எண் 0452-2566420 மற்றும் 98425 67308 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாய்ப்பினை 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.