தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

7 Jun 2026, 10:37 pm
விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
<p><strong>விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்</strong></p><p>5 பேருக்கு புதிய வாழ்வு இராமநாதபுரம், ஜூன் 7- இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில், சாலை விபத் தில் மூளைச்சாவு அடைந்த ஏர்வாடியைச் சேர்ந்த முனிய சாமியின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன. தமிழ்நாடு அரசின் உறு ப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, காத்தி ருப்பு பட்டியலில் இருந்த நோயா ளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அமுதாராணியின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த நடவ டிக்கையை, உறுப்பு தானப் பொறுப்பு மருத்துவரும் நரம் பியல் அறுவை சிகிச்சை நிபு ணருமான டாக்டர் பரணி தரன் தலைமையிலான மருத்துவக் குழு ஒருங்கி ணைத்தது. இந்தக் குழுவில் மயக்க வியல் துறை இணைப் பேரா சிரியர் டாக்டர் சுகுமார், அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் மலர்வண் ணன், டாக்டர் வினோத் மற்றும் மயக்கவியல் உதவி பேராசிரியர் டாக்டர் வள்ளி பிரியா ஆகியோர் இடம் பெற்றனர். உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளராக சூர்யா செயல்பட்டார். உறுப்பு தானம் செய்த முனியசாமிக்கு அரசு வழி காட்டுதலின்படி அரசு மரி யாதை செலுத்தப்பட்டு, பின் னர் அவரது உடல் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உறுப்பு தானத்தின் மூலம் ஐந்து நோயாளிகள் புதிய வாழ்வைப் பெற்றுள்ள தாக மருத்துவமனை நிர்வா கம் தெரிவித்துள்ளது. குடும் பத்தின் மனிதநேயமான முடிவுக்கு பல்வேறு தரப்பி னரும் பாராட்டு தெரிவித் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.