குப்பை, கழிவுநீர் தேக்கங்களை அகற்றக் கோரி மாதர் சங்கம் மனு
6 Jul 2026, 9:38 pm
<p><strong>குப்பை, கழிவுநீர் தேக்கங்களை அகற்றக் கோரி மாதர் சங்கம் மனு</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை 6- இராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மற்றும் காவல்துறை 11-வது பட்டாலியன் குடியிருப்பு பகுதியில் நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகள் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளை சரிசெய்யக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரனிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் இ.கண்ணகி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருவதாகவும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மற்றும் காவல்துறை 11-வது பட்டாலியன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பேருந்து வசதி, மின்சார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாததுடன், தெருவிளக்குகள் இல்லாததால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குப்பை மற்றும் கழிவுநீர் தேக்கங்கள் காரணமாக கடுமையான சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாகவும், குப்பைகளுக்கு தீ வைக்கப்படும் போது எழும் புகை காவல்துறை 11-வது பட்டாலியன், அம்மன் கோவில் கிராமம், தெற்குத் தரவை, பட்டிணம்காத்தான் கிராமம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பரவி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு குப்பை மற்றும் கழிவுநீர் தேக்கங்களை அகற்றி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்வில் இராமநாதபுரம் தாலுகா தலைவர் ஜி.குருவம்மாள் மற்றும் தாலுகா குழு உறுப்பினர் பி.கௌரி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
