ராமநாதபுரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி நடுகல் கண்டெடுப்பு
3 Jun 2026, 12:42 am
<p><strong>ராமநாதபுரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி நடுகல் கண்டெடுப்பு</strong></p><p>சென்னை, ஜூன் 2- ராமநாதபுரம் மாவட்டம், அப்பனூர் கிராமத்தில் உள்ள அரியாநாச்சி அம்மன் கோயிலில், கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்ட நடுகல் ஒன்றை வர லாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கமுதி அருகே உள்ள பேரூர் பள்ளி ஆசிரியர் முனி யசாமி என்பவர் இந்த நடுகல்லைக் கண்டறிந்துள் ளார். குவார்ட்ஸ் (Quartz) பாறையில் மூன்று வரிகளில் செதுக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக்கள், “அப்பனூர் எறி மண்டு விழுந்த அத்தி யன் கீரன் கல்” என வாசிக்க முடிகிறது. இதற்கு, அப்பனூ ருக்கு எதிராகப் போரிட்டு வீர மரணமடைந்த ‘அத்தியன்’ என்பவரின் மகன் ‘கீரன்’ நினைவாக இந்த நடுகல் எழு ப்பப்பட்டது என்று பொருள். ராமநாதபுரம் மாவட்டத் தில் தமிழ் பிராமி எழுத்துக் க்களுடன் கண்டறியப்படும் முதல் நடுகல் இதுவாகும். கடினமான குவார்ட்ஸ் பாறையில் கூர்மையான உளியைக் கொண்டு, மிகத் திறமையான கைவினைஞ ரால் மட்டுமே இந்த எழுத்து க்களைச் செதுக்க முடியும் என்று தொல்லியல் அறிஞர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மதுரை மாங்குளம் (கி.மு. 2-ஆம் நூற்றாண்டு) மற்றும் தேனி புலிமான் கொம்பை (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) நடுகற்களுக்கு அடுத்தபடியாக, சற்றே பிந்தைய காலத்தைச் சேர்ந்த வளர்ந்த எழுத்து வடி வத்தைக் கொண்ட இந்த நடுகல், பாண்டிய வம்சத் தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து முறை பரவ லாக இருந்ததற்கான மிக முக்கிய வரலாற்றுச் சான்றா கும் எனத் தொல்லியல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள் ளனர்.</p>
