முந்தய பக்கம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி 17 அரசுப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

9 May 2026, 12:43 am
இராமநாதபுரம் மாவட்டத்தில்  96.70 சதவீதம் பேர் தேர்ச்சி 17 அரசுப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி
<p><strong>இராமநாதபுரம் மாவட்டத்தில் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி 17 அரசுப்பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி</strong></p><p>இராமநாதபுரம், மே 8- பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 6709 மாணவர்களும், 7323 மாணவிகளும் என மொத்தம் 14,032 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். மே 8 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவின்படி 6369 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 94.93 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7200 மாணவிகள் தேர்ச்சி பெற்று 98.32 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 96.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 17 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அரசு உதவிபெறும் 36 மேல்நிலைப் பள்ளிகளில் 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 54 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram