கலைத் திருவிழாவில் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்
4 Dec 2025, 3:52 pm
<p><strong>கலைத் திருவிழாவில் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் </strong></p>
<p>கும்பகோணம், டிச.4- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கலைத் திருவிழா என்ற பெயரில் பல்வேறு போட்டிகள் 2021 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்தும் வகையி/fல் அமைந்துள்ள கலைத் திருவிழா, 2025-26 போட்டிகள் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என மூன்று சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டிகளில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார் கோவிலில் நூற்றாண்டு கண்ட ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 6-8 கிராமிய நடனம் குழு போட்டியில் கலந்து கொண்டனர். திருவிடைமருதூரில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான போட்டியிலும் தஞ்சாவூர் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று நவம்பர் 26 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இது தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட உதவிபெறும் பள்ளிகள் கலந்து கொண்ட போட்டியில், நாச்சியார்கோவில் நடுநிலைப்பள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனது.</p>
