வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராமகுண்டம் ஆர்எஃப்சிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி வெற்றி
18 May 2026, 9:39 pm

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராமகுண்டம் ஆர்எஃப்சிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிரடி வெற்றி

வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பணிந்தது கார்ப்பரேட் நிர்வாகம்

வேலைநிறுத்தம் 22

பெத்தபள்ளி, மே 18- தெலுங்கானா மாநிலத்தின் உர உற்பத்தித் துறையில் முக்கியப் பங்காற்றி வரும் ராமகுண்டம் உரங்கள் மற்றும் இரசா யனங்கள் நிறுவனத்தின் (RFCL) ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் உரிமை களுக்காக நடத்திய அதிரடி வேலை நிறுத்தப் போராட்டம் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புரிமை, ஊதியச் சுரண்டல் மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழலுக்கு எதிராகத் திரண்ட தொழிலாளர்களின் இந்த எழுச்சி, பொதுத்துறை மற்றும் கூட்டு நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழி லாளர்கள் எதிர்கொள்ளும் அவலங்களை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இத்தொடரின் 22-ஆவது பகுதியில், தொழிலாளர் வர்க்கத்தின் இந்த அதிரடி வெற்றியை விரிவாகக் காண்போம்.

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்எஃப்சி எல் (RFCL) உர ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்கள், ‘அலைடு ஒர்க்கர்ஸ் யூனியன்’ (Allied Workers Union) தலை மையில் கடந்த மே 7, 2026 அன்று தங்களின் தார்மீகப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆலையின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் நடத்திய இந்த அதிரடி வேலைநிறுத்தம், நாட்டின் முக்கிய உர உற்பத்தி நிலையத்தின் இயக்க த்தைச் சில நாட்கள் முடக்கியதோடு, உள்ளூர் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூர் வேலைவாய்ப்புப் புறக்கணிப்பும் கொடூரச் சுரண்டலும்

க்கணிப்பும் கொடூரச் சுரண்டலும் தேசிய உர நிறுவனம் (NFL), என்ஜினி யர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) மற்றும் தெலுங்கானா அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான இந்த நவீன இயற்கை எரிவாயு அடிப்படையிலான ஆலை, நாளொன்றுக்கு 3,850 மெட்ரிக் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆலையில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்க ப்பட்டு, வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுவதற்கு எதி ராகத் தொழிலாளர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மேலும், அபாயகரமான அம்மோனியா மற்றும் யூரியா பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு படிகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, சட்டப்பூர்வமாகத் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து 12 விழுக்காடு மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், நிர்வாகம் சுமார் 25 விழுக்காடு வரை அராஜகமாகப் பிடித்தம் செய்து தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியது தொழிலாளர்கள் மத்தி யில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யிருந்தது.

அரசு தலையீடும் - பணிந்த நிர்வாகமும்

தொழிலாளர்களின் தொடர் முடக்கப் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த தெலு ங்கானா மாநிலத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் இப்போராட்டத்தில் நேரடியாகத் தலை யிட்டார். மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அரசு உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஆர்எஃப்சிஎல் ஆலை மேலாண்மை அதிகாரிகளுக்கு இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. தொழிலாளர்களின் இரும்பு போன்ற ஒற்றுமையின் முன்னால் ஆலை நிர்வாகம் இறங்கி வரத் தொடங்கியது.

ஏற்கப்பட்ட முக்கியக் கோரிக்கைகள்

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிலாளர்களின் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை நிர்வாகம் அதிகாரப்பூர்வ மாக ஏற்றுக் கொண்டது:

1. வருங்கால வைப்பு நிதி சீரமைப்பு: சட்ட விரோதமாகப் பிடிக்கப்பட்டு வந்த 25% பிஎஃப் பிடித்தம் நிறுத்தப்பட்டு, சட்டப் பூர்வ வரம்பான 12% ஆகக் குறைக்கப் பட்டது.

2.  எரிவாயு படிகள்: அபாயகரமான அம் மோனியா மற்றும் யூரியா பிரிவுகளில் பணியாற்றுபவர்களுக்கு 17.44% ‘கேஸ் அலவன்ஸ்’ (Gas Allowance) வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

3. பணி பாதுகாப்பு மற்றும் உயர்வு: 3 ஆண்டுகள் தடையின்றிப் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி உயர்வும், தன்னிச்சையான வேலைநீக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வேலை பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.

4.  உள்ளூர் முன்னுரிமை: ஆலை வேலை வாய்ப்புகளில் தெலுங்கானா மாநில உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னு ரிமை வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.

5.  சமூக நலன்கள்: ஆலை வளாகத்திற்கு ள்ளேயே இபிஎஃப் மற்றும் இஎஸ்ஐ உதவி மையங்களை அமைத்தல், தொழி லாளர்களின் குழந்தைகளுக்கு டவுன்ஷிப் பள்ளிகளில் சேர்க்கை முன்னு ரிமை மற்றும் முறையான மருத்துவ வச திகள் வழங்க நிர்வாகம் சம்மதித்தது.

பெத்தபள்ளி மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் இந்த உடன்பாடுகள் அனை த்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்தி டப்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் தங்களின் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுப் பணிக்குத் திரும்பினர். தேசிய உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், தொழிலாளர்களின் நலன்க ளையும் உள்ளூர் மக்களின் வாழ்வாதா ரத்தையும் காப்பது மட்டுமே நீடித்த தொழில் அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை ராமகுண்டம் தொழிலாளர்களின் இந்த அதிரடி வெற்றி கார்ப்பரேட் உலகிற்கு உணர்த்தியுள்ளது.