தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 Jan 2026, 3:41 pm

திமுக ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு

திண்டிவனம்: பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், இருவரும் கட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறிவருகின்றனர். இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதாக தெரிவித்தார். ஆனால், “பாமக நிறுவனர் நான்தான். நான் எடுக்கும் முடிவே செல்லும். அன்புமணி கூட்டணி வைத்தது செல்லாது” என்று ராம தாஸ் அறிவித்தார். இந்நிலையில், பாமகவில் விருப்ப மனு வழங்கும் பணியை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அவருடைய மகளும், செயல் தலை வருமான காந்திமதி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அதன்பின்னர், ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும் போது, “பாமகவில் இரு அணிகள் கிடையாது. என் தலைமை யிலான அணிதான் பாமக. வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் விரும்பிய வெற்றியை பெறுவோம். முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான திமுக ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. பாமக செயல் தலைவர் காந்திமதி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்” என்றார். தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், “திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக் கிறதா?” என்று கேட்ட கேள்விக்கு, “அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லாமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என்றார்.

அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக மாற்றி அரசா ணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சோ. சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை வரவேற்பதோடு, அத்திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான திட்டமாக மாற்றி விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதுவரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பெறப்பட்ட ஊழியர்களின் 10 சதவீத நிதியினை, ஊழியர்களின் பொது வைப்பு நிதிக்கு மாற்றி, 6 மாதத்திற்கு ஒருமுறை முன்பணம் பெறும் வசதி வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது வட்டி யுடன் முழுத் தொகையையும் வழங்க வேண்டும். ஊழியர் களிடமிருந்து, ஓய்வூதியம் வழங்குவதற்காக ஊதியத்தி லிருந்து 10 சதவீத நிதி பிடித்தம் செய்தல் கூடாது. முழு ஓய்வூ தியம் பெறுவதற்கு குறைந்தபட்ச ஆண்டுகள் நிர்ணயிக்கக் கூடாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தில் கம்யூடேஷன் தொகை (தொகுத்துப் பெறும் தொகை) பெறும் வசதி வழங்கப்பட வேண்டும். ஊழியர் அல்லது ஓய்வூதியர் இறந்தால், இறப்பிலிருந்து 7 ஆண்டு அல்லது 65 வயது - இதில் எது முதலில் வருகிறதோ அதனை கணக்கில் கொண்டு, வழக்கம் போல் 100 சதவீத ஓய்வூதியமும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

4 வாரத்தில் மீட்க உத்தரவு

சென்னை: தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை., 35 ஆண்டாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் நிலத்தை தங்க ளுக்கே ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாஸ்த்ரா கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை 4 வாரங்களில் மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, வெள்ளியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. தற்போது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மட்ட களப்பிற்கு (இலங்கை) கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு மற்றும் தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவி லும், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு மற்றும் வட கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென் கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே ஜனவரி 10 அன்று கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.10 முதல் ஜன. 16 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரசின் 50 வகையான சான்றுகளை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

சென்னை, ஜன.9 - தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை புதிய முயற்சியாக வாட்ஸ்அப் வழியாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த சான்றி தழ்களைப் பெற அரசு அலுவல கங்கள் மற்றும் மருத்துவமனை களை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. பொது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறு வனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் படி, தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ் அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களைப் பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைச்சர் பி.டி.ஆர் முன்னிலையில் வாட்ஸ் அப் நிறு வன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரி கள் இடையே கையெழுத்தானது. தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பி பெறலாம் என்று மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் தெரி வித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றி தழ்கள் கிடைப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். சான்றிதழ் தொ டர்பான ஆவணங்களையும் பதி வேற்றம் செய்ய வேண்டும். பொது மக்கள் குறுந்தகவல் அனுப்பிய ஒரு சில நாட்களில் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பப் படும்” என்றார்.

தேர்தல் அறிக்கை குழு செங்கோட்டையனுக்கு இடமில்லை!

சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். கே.ஜி.அருண்ராஜ், ஜே.சி.டி. பிர பாகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவில், தமி ழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கி ணைப்பாளர் செங்கோட் டையன் இடம்பெற வில்லை என்பது பல ருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜன.12- சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் விஜய்

சென்னை: கடந்த ஆண்டு செப்.27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சோகமான சம்பவம் தொ டர்பாக சிபிஐ தனது விசா ரணையைத் தீவிரப் படுத்தியுள்ளது. இந்நிலையில், தமி ழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் ஜனவரி 12 ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இத னிடையே, கரூரில் உள்ள பொதுப் பணித்துறை விருந்தினர் இல்லத்தைத் தனது தற்காலிக விசா ரணைத் தளமாக சிபிஐ மாற்றியுள்ளது. அங்கு நடைபெற்ற விசாரணையில், நிர்வாகி களின் வாக்குமூலங்கள் முந்தைய சாட்சியங்களு டன் ஒப்பிட்டுச் சரி பார்க்கப்பட்டன. சிபிஐ-யின் சம்மனை ஏற்று விஜய் ஜன.12 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள் ளார்.

அதிகாரிகள் ஆய்வு

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலால் உயிரிழப்பு சம்பவ வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச் சகம் மற்றும் மத்திய தட யவியல் துறை அதிகாரி களைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர், கரூ ரில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதி காரிகளுடன் வெள்ளிக் கிழமை கரூர் வேலுச்சாமி புரத்தில் நெரிசல் சம்ப வம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.