இராஜபாளையத்தில் ரம்ஜான் திருநாள் தொழுகை
21 Mar 2026, 2:42 pm
<p><strong>இராஜபாளையத்தில் ரம்ஜான் திருநாள் தொழுகை</strong></p>
<p>இராஜபாளையம், மார்ச் 21- உலகம் முழுவதும் இஸ் லாமியர்களால் கொண்டா டப்படும் ரம்ஜான் பண்டிகை யையொட்டி, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கீழப்பள்ளிவாசல், மேலப் பள்ளிவாசல், பூபால் ராஜா பட்டி தெரு, பெரிய கடை பஜார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அனை த்து இஸ்லாமிய மக்களும் இப்தார் மைதானத்தில் இருந்து துவங்கி இராஜ பாளையம் முடங்கியார் ரோடு பகுதியில் உள்ள ஈக்கா மைதானம் வந்தடைந்த னர். அங்கு சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் போன்றவற்றை வலியுறுத்தி வாழ்த்துக்களை தெரி வித்துக் கொண்டனர். பல் வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன.</p>
