தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கூடுதல் அவகாசம்

1 Jul 2026, 8:59 pm
ராமர் கோவில் நன்கொடை முறைகேடு  சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கூடுதல் அவகாசம்

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கூடுதல் அவகாசம்

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு (SIT) விசார ணையை முடிக்க மேலும் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விரிவாகவும், முழுமையாகவும் விசாரிக்கும் வகை யில் இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எந்தவொரு கோணமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும், குற்றவாளிகள் யாரும் தப்பிவிடக் கூடாது என்ப தற்காகவும் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

ராமர் கோவில் நன்கொடையில் பெரும் நிதி முறைகேடு நடந்துள்ள வழக்கில், கைது செய்யப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அயோத்தி நீதிமன்றம் கடந்த ஜூன் 29 அன்று உத்தரவிட்டது. கோவிலில் நிதி முறைகேடுகள் மற்றும் காணிக்கை நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகார்களின் பேரில், உத்தரப் பிரதேச காவல்துறை நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, ஊழல் புகார்கள் எழுந்த நிலையில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, கோவில் நன்கொடை முறைகேடு தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக, சம்பத் ராயிடம் காவல்துறை விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.