ரேலியா அணையில் நீர்மட்டம் சரிவு: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
1 Jul 2026, 1:29 am
<p><strong>ரேலியா அணையில் நீர்மட்டம் சரிவு: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்</strong></p><p>உதகை, ஜூன் 30- குன்னூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணையில் நீர்மட்டம் சரிந்துள்ளதால், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் 56 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக ரேலியா அணை இருந்து வருகிறது. இந்த அணையானது 43.5 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையி லிருந்து குன்னூர் நகரிலுள்ள குடியிருப்பு பகுதிக ளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகி றது. பருவ மழைக்காலங்களில் இந்த அணையானது அதன் முழு கொள்ளளவை எட்டும். இதனிடையே, கடந்த மாதம் போதிய மழை பெய்யாததால், அணை வறண்டு 30 அடியில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தற்போது எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம், கரன்சி குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் நீர் நிலைகளை வைத்தே குன்னூர் மக்களுக்கு மூன்று நாட்க ளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. எனவே, மக்கள் தண்ணீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணை யர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
