ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திடுக – சிபிஎம்
27 Jun 2026, 1:01 am
<p><strong>ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திடுக – சிபிஎம்</strong></p><p>அவிநாசி, ஜூன் 26- ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ராக்கியாபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஏழை, எளிய மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆண்டுதோறும் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் நூறு சத வீதத் தேர்ச்சியும், சிறந்த மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் மேல் நிலைப் பள்ளி (11, 12 ஆம் வகுப்புகள்) இல்லா ததால், 10 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவ- மாணவிகள் உயர்கல்விக்காக பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிற நகரப் பள்ளிக ளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. இதனால் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகி, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேவையற்ற அலைச்சலும், கூடுதல் பொரு ளாதார சுமையும் ஏற்படுகிறது. குறிப்பாக, கிராமப்புறப் பெண் பிள்ளைகளின் கல்வி தொடர்ச்சியில் இது தொய்வை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. எனவே, ராக்கியாபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களின் உயர் கல்வி நலனை உறுதி செய்யும் வகையி லும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையி லும், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை உடனடியாக மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தி, நடப்பு கல்வி ஆண்டி லேயே 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தொடங்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித் துறையும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது.</p>
