தீக்கதிர் முக்கிய செய்திகள்
16 May 2026, 8:49 pm

பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்

நாட்டில் முஸ்லிம்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி, இழிவுபடுத்துபவர்களுக்கு, முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை. வெறுப்பில் கூட மோடி உண்மையாக இல்லை.

காங்கிரஸ் எம்.பி., இம்ரான் பிரதாப்கர்ஹி

தன் சொந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடக்கும் வெறுப்பு வன்முறைகளைக் கண்டும் காணாமல் கண்மூடி இருக்கும் பிரதமர் மோடி, திருவிழாவில் தொலைந்து போன ஒரு சகோதரரைத் திரும்பப் பெற்றது போல ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளரைக் கட்டியணைத்து மகிழ்கிறார். வெளியில் இருப்பவர்களிடம் அன்பு, தன் சொந்த நாட்டு மக்களிடம் ஒடுக்குமுறை.

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி

பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் கொலைச் சம்பவங்களுக்கு அரசே உதவி செய்வது போன்று சந்தேகம் கிளம்பியுள்ளது. பாட்னாவில் மின்தடையைத் தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்தி ஒரு தொழிலதிபரை குற்றவாளிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். மின்தடை ஏற்பட்ட 5 நிமிடங்களில் நடந்த இந்த குற்றச்செயல் பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

நாகா மாணவர் முன்னணி

சிங்கப்பூரில் நெருக்கடி நிலவுவதாக அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் அங்கு வேலைபார்க்கும் இந்தியர்களின் நிலைமை என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றிய பாஜக அரசோ வழக்கம் போல அமைதி காத்து வருகிறது. இது ஆபத்தானது.