முந்தய பக்கம்

மாநிலங்களவை தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

1 Jun 2026, 10:44 am
மாநிலங்களவை தேர்தல்: இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
<p>நாடு முழுவதும் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.</p><p>அதேபோல், தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கும் இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியாகியுள்ளது.</p><p>வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணைப்படி தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். </p>
Share
FacebookXWhatsAppTelegram