வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் பிரதமர் மோடி ராமர் கோவில் முறைகேட்டுக்கு ஏன் மௌனம் காக்கிறார்? பேராசிரியர் ராஜீவ் கௌடா விளாசல்
11 Jul 2026, 8:39 pm
<p><strong>வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் பிரதமர் மோடி ராமர் கோவில் முறைகேட்டுக்கு ஏன் மௌனம் காக்கிறார்? பேராசிரியர் ராஜீவ் கௌடா விளாசல்</strong></p><p>புதுதில்லி வகுப்புவாத உணர்வுக ளைத் தூண்டும் பிரதமர் மோடி ராமர் கோவில் முறைகேட்டுக்கு ஏன் மௌனம் காக்கிறார்? என பேராசிரி யர் ராஜீவ் கௌடா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சனியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பின் போது அவர் மேலும் கூறுகை யில்,“உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் தொடக்க விழா விற்குத் தலைமையேற்றுப் பெருமை தேடிக்கொண்ட பிரத மர் மோடி, தற்போது எழுந்துள்ள ராமர் கோவில் அறக்கட்டளை நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். அமித் ஷா ராமர் கோவில் அறக்கட்டளை யின் அனைத்துச் செயல்பாடுகள், நியமனங்கள் ஒன்றிய அரசால் செய்யப்பட்டன. உள்துறை அமைச் சர் அமித் ஷா இந்த நியமனங்களில் முக்கியப் பங்கு வகித்தார். அவர் உத்தரவின்படியே அறக்கட்டளை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். நாட்டின் அதிக வருவாய் மற்றும் செலவீனங்களை கொண்ட ராமர் கோவிலை கையாளும் அறக்கட்ட ளை ஏன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது? நேர்மையாகச் செயல்படுவதாக இருந்தால், ஏன் இச்சட்டத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்? அறக்கட்டளை யின் முக்கியப் பொறுப்பிலிருந்த சம்பத் ராய், அனில் மிஸ்ரா ஆகி யோர் ஏன் திடீரென பதவி விலகி னார்கள்? இவர்கள் நடந்த கொள் ளையை வேடிக்கை பார்த்துள்ள னர். விஷயம் கசிந்தவுடன் வெளி யேறியுள்ளனர். ஊழல் அதிகாரி நிதி முறைகேடு குறித்து விசா ரிக்க உத்தரப்பிரதேச பாஜக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்குத் தலைமையேற்றுள்ள அதிகாரி மீதே மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த விசாரணைக் குழு சிறிய அளவிலான நபர்களை மட்டுமே குறிவைக்கிறது. சிறிய தொகை மட்டுமே முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் உண்மையான பெரும் பணம் எங்கே போனது? சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் மீது உடனடியா கக் காவல்துறையில் புகார் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனக்குச் சாதகமான விஷயங்கள் அல்லது வகுப்புவாத உணர்வு களைத் தூண்டும் விவகாரங்களில் பேசும் பிரதமர் மோடி, தற்போது ஏன் மௌனம் காக்கிறார்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
