தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜஸ்தானில் கோர விபத்து சாலை அமைக்கும் இயந்திரம் மின்சாரக் கம்பியில் உரசி 8 தொழிலாளர்கள் பலி ஜெய்ப்பூர்

2 Nov 2026, 9:49 pm
ராஜஸ்தானில் கோர விபத்து சாலை அமைக்கும் இயந்திரம் மின்சாரக் கம்பியில் உரசி 8 தொழிலாளர்கள் பலி ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் கோர விபத்து சாலை அமைக்கும் இயந்திரம் மின்சாரக் கம்பியில் உரசி 8 தொழிலாளர்கள் பலி

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ளது சபோலி கிராமம். இந்த கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமைகாலைசபோலி மற்றும் கதம்குண்ட் ஆகியபகுதிகளை இணைக்கும் குறுகியசாலையில் கலவை இயந்திரம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராவிதமாக மேலே சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பியில் கலவை இயந்திரம் உரசியதில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்

இந்நிலையில், உயிரிழந்த 8 தொழிலாளர்களும் சபோலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அக்கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதே போல ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக்கெலாட்,“சபோலி கோர விபத்துக்கு யார் பொறுப்பு என்பதைத்தீர்மானிக்கவிசாரணை நடத்தவேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த நிவாரணமும், உதவியும் வழங்க வேண்டும்” என ராஜஸ்தான் பாஜகஅரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.