வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் நிடெக் ஆலை தொழிலாளர்களின் அதிரடி போராட்டம்
5 Jun 2026, 1:33 am

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

ராஜஸ்தான் நிடெக் ஆலை தொழிலாளர்களின் அதிரடி போராட்டம்

“உடைந்த வாயில்களும், குண்டர்களின் வன்முறையும்”

வேலைநிறுத்தம் 50

நீம்ரானா, ஜூன் 4 - தில்லி-மும்பை தொழில் வழித்தடத்தில் (DMIC), ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தின் நீம்ரானா ஜப்பானிய தொழிற்பேட்டையில் (RIICO Japanese Zone) அமைந்துள்ள ‘நிடெக் இந்தியா’ (Nidec India) மின்சார வாகன (EV) மோட்டார் உற்பத்தி ஆலையில் வெடித்த தொழிலாளர் வர்க்கப் போராட்டம், வன்முறை ஒடுக்குமுறைகளையும் கடந்து பெரும் கொந்தளிப்பாக மாறி யுள்ளது.

இந்தியாவின் அதிநவீன மின்சார வாகன மோட்டார்கள் மற்றும் உயர்தர மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் இந்த பன்னாட்டு ஜப்பானிய நிறுவனம், தங்களின் நியாய மான உரிமைகளைக் கேட்ட தொழி லாளர்களை ஒடுக்கப் பழமையான வன்முறை வழிகளைக் கையாண்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாலையில் பணிபுரியும் சுமார் 1,100 தொழிலாளர்களில் 60 முதல் 75 சதவீதத்தினர் எவ்வித பணிப் பாதுகாப்பும் அற்ற தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். கடந்த ஏப்ரல் 17 அன்று நூற்றுக்கணக்கான ஒப்பந்த மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் ஒன்றி ணைந்து ஆலை வாயிலில் மாபெரும் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

குண்டர்களின் தாக்குதலும் தொழிலாளர்களின் ஆவேசப் பதிலடியும் ஏப்ரல் 18 அன்று ஆலை வாயிலில் அமைதியாக நடந்துகொண்டிருந்த தொழிலாளர்களின் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.

ஆலை வாயிலை முற்றுகையிட்டிருந்த தொழி லாளர்கள் மீது, டிராக்டரில் வந்த அடை யாளம் தெரியாத ஆயுதம் தாங்கிய குண்ட ர்கள் தடிகளைக் கொண்டு கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். இந்த அராஜகம் தொழிலாளர்கள் மத்தியில் காட்டுத்தீ போன்ற கோபத்தை மூட்டியது.

ஆலை வாயிலில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கல்வீச்சில் ஈடுபட்ட தோடு, பாதுகாப்பு அரண்களை உடைத்து க்கொண்டு ஆலைக்குள் புகுந்தனர்.

தொழிலாளர்களின் இந்தத் தீவிரத்தால் ஆலையின் பிரதான வாயில்கள், ஜன்னல்கள் மற்றும் பாதுகாப்பு அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால், ராஜஸ்தான் மாநிலக் காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு ஆலை வளாகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

தொழிலாளர்களின் குமுறல்களும் அடிமட்ட அவலங்களும் அண்டை மாநிலமான ஹரியானா அரசு போராட்டங்கள் காரணமாக தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 35 சதவீதம் உயர்த்திய நிலையில், அதே விலைவாசி நீடிக்கும் ராஜஸ்தான் எல்லையில் தங்களின் ஊதியம் பல ஆண்டுகளாக உறைந்து கிடப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்ணு என்ற தொழிலாளி ஊடகங்களிடம் பேசுகையில், “நாங்கள் தெருவிற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பெஹ்ரோர் பகுதியில் வீட்டு வாடகையும் விலைவாசியும் விண்ணைத் தொட்டுவிட்டன. ஆனால் எங்களின் உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியமோ மிகவும் அற்பமானது.

அசெம்பிளி லைனில் நாங்கள் இடைவிடாது நீண்ட நேரம் உழைத்தாலும், அதற்குரிய கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படுவ தில்லை. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட பல நாள் சம்பளத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்; வேலைநீக்க மிரட்டல் விடுக்கிறார்கள்.

ஆலையின் உண வகத்தில் வழங்கப்படும் உணவும் தரம் குறைந்ததாக உள்ளது” என்று குமுறினார்.

முன்னதாக, ஏப்ரல் 1 அன்று தேசிய கருப்பு தினப் போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் கைகளில் கருப்புப் பட்டி அணிந்து அசெம்பிளி லைன்களில் பணியாற்றியதோடு, டைகின் (Daikin), ஹோண்டா (Honda) போன்ற அண்டை ஆலைத் தொழிலாளர்களுடன் இணைந்து மாபெரும் வர்க்க ஒருமைப்பாட்டுப் பேரணியையும் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தரப்புப் பேச்சுவார்த்தையும் வென்றெடுக்கப்பட்ட உடன்பாடுகளும் ஆலையின் உற்பத்தி முற்றிலும் முடங்கியதை அடுத்து, மாநிலத் தொழிலாளர் துறை மற்றும் பிராந்திய தொழிலாளர் ஆணையர் (RLC) முன்னிலையில் அவசர முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆலையில் முறையான தொழிற்சங்கம் இல்லாததால், தொழிலாளர்கள் தங்களுக்குள் 5 முதல் 7 பேர் கொண்ட தற்காலிகக் குழுவை அமைத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு சிஐடியு, ஏஐடியுசி மற்றும் புரட்சிகர தொழிலாளர் கேந்திரா போன்ற அமைப்புகள் வழிநடத்துதல் உதவிகளை வழங்கின.

ஏப்ரல் 19 நள்ளிரவில் எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள் வருமாறு: ஊதிய மறுஆய்வுக் குழு: உடனடி யாக ஊதிய உயர்வு வழங்கப்படாவிட்டாலும், தில்லி-தேசிய தலைநகர் பிராந்திய (NCR) ஊதியக் கட்டமைப்பிற்கு இணையாக நிடெக் ஆலையின் ஊதியத்தை மாற்றியமைக்கத் தனிப் பரிசீலனைக் குழு அமைக்கப்படும்.

கூடுதல் நேர ஊதியம்: நீட்டிக்கப் பட்ட வேலை நேரங்களுக்குச் சட்டப்பூர்வ மாக இரட்டிப்பு கூடுதல் நேர ஊதியம் வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

அபராத விடுப்பு நீக்கம் : ஒரு நாள் விடுப்பிற்குப் பல நாள் சம்பளத்தைக் கழிக்கும் தன்னிச்சையான அநீதி முறை ரத்து செய்யப்பட்டு, விடுப்பு எடுத்த நேரத்திற்கு மட்டுமேயான பிடித்த முறை அமல்படுத்தப்படும்.

பழிவாங்கல் நடவடிக்கை இல்லை: போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதோடு, போராட்டக் குழு பிரதி நிதிகள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை யோ, சட்ட நடவடிக்கையோ எடுக்கப்பட மாட்டாது என்ற சட்டப்பூர்வ பொதுமன்னி ப்பு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டது.

கண்ணியமும் பாதுகாப்பும்: ஆலை உணவகத்தின் தரம் உயர்த்தப் படும் என்றும், எதிர்காலத்தில் தொழி லாளர் போராட்டங்களின் போது வெளி யில் இருந்து தற்காலிகக் குண்டர்கள் ஆலைக்குள் நுழைவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும் ஆலையின் மனித வள மேம்பாட்டுத் துறை உறுதியளித்தது.

இந்த எழுத்துப்பூர்வமான வர்க்க வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை ஷிப்ட் முதல் தொழிலாளர்கள் தங்களின் உரிமை களை நிலைநாட்டி மீண்டும் அசெம்பிளி லைன்களுக்குத் திரும்பினர். தி லெப்ட் வியூஸ்