முந்தய பக்கம்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: சிபிஎம் 57 இடங்களில் வெற்றி!

yesterday
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: சிபிஎம் 57 இடங்களில் வெற்றி!
<p>ராஜஸ்தான் மாநில பஞ்சாயத்து ராஜ் உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம்57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.</p><p>ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.</p><p>ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் 50 இடங்களையும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பத்ரா (19-இல் 15 இடங்களில் வெற்றி) மற்றும் ராஜ்புரா (19-இல் 14 இடங்களில் வெற்றி) ஆகிய இடங்களில் தனிப்பெரும்பான்மை பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளது.</p><p>202-இல் நடைபெற்ற கடந்த தேர்தலைவிட ஊராட்சி ஒன்றிய இடங்களில் 34 இடங்கள் கூடுதலாக வென்று தனது பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தியுள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டங்கள் இந்த வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக அமைந்துள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram