தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜஸ்தான் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் கடும் சரிவு

14 Jul 2026, 9:24 pm
ராஜஸ்தான் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் கடும் சரிவு

ராஜஸ்தான் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் கடும் சரிவு

2 ஆண்டுகளில் 9,00,000

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக பஜன்லால் சர்மா உள்ளார். இந்நிலையில், ராஜஸ்தானில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் கடும் சரிவு ஏற்பட்டுள் ளது

. கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண் ணிக்கை 8 லட்சத்திற்கும் மேல் குறைந்துள் ளது. இதுதொடர்பாக ராஜஸ்தான் ஒருங்கி ணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்த மாணவர் சேர்க்கை 2023-24இல் 1.67 கோடியாக இருந்தது. இது 2025-26இல் 1.59 கோடியாகக் குறைந்துள்ளது (சராசரி மட்டும்). இது மிக மோசமான சரிவாகும்.

இந்தச் சரிவில் அரசுப் பள்ளிகள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மட்டும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் (அரசு பள்ளி களின் மொத்த எண்ணிக்கையின் சராசரி இழப்பு மட்டும்) குறைந்துள்ளனர். அதேவேளையில், தனியார் பள்ளிகள் தங்களது மாணவர் எண்ணி க்கையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. மாணவர் சேர்க்கை சரிந்த போதிலும், மாநிலம் முழுவதும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 7.75 லட்சத்திலிருந்து 7.93 லட்சமாக உயர்ந்துள்ளது.

மாணவர் சேர்க்கை சரிவு சிறுவர் மற்றும் சிறுமியர் என இருபால ரிடமும் காணப்பட்டாலும், சிறுவர்களிடையே இந்த வீழ்ச்சி சற்று அதிகமாக உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் யுனிசெப் கொள்கை வகுப்பாளர் கே.பி.கோத்தாரி கூறுகையில்,”மாணவர் சேர்க்கை குறைவுக்கு நாட்டின் மக்கள் தொகை மாற்றமும் கார ணம்.

பிறப்பு விகிதம் குறைவதால் பள்ளிக ளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறை கிறது. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் மட்டும் சரிவு அதிகமாக இருப்பது, பெற்றோர் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை எதிர் பார்ப்பதையே காட்டுகிறது.

இனி வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக் கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், கல்வியின் தரம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம் படுத்துவதிலேயே அரசு கவனம் செலுத்த வேண்டும்” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.