போலிக் குற்றச்சாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்கு ராஜஸ்தான் பாஜக அரசு அட்டூழியம்
25 Nov 2025, 3:29 pm
<p> </p>
<p><strong>போலிக் குற்றச்சாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்கு ராஜஸ்தான் பாஜக அரசு அட்டூழியம்</strong></p>
<p>ஜெய்ப்பூர் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா அருகே போர்கேரா காவல் நிலை யத்தில் பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் குண்டர்கள் அளித்த மத மாற்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. போர்கேராவில் உள்ள பீர்ஷேபா தேவாலயம் நவம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை அதே பகுதியில் “ஆத்மிக் சத்சங்கம்” என பொது நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மதமாற்றம் செய் யப்பட்டதாக பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த இந்துத்துவா குண் டர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து நவம்பர் 20 அன்று போர்கேரா காவல்துறை பீர்ஷெபா தேவாலயத்தின் பாதிரி யார் அருண் ஜான் மற்றும் தில்லி யில் உள்ள சியோன் குளோபல் வழி பாட்டு மையத்தின் நிறுவனர் பாதிரி யார் சாண்டி வர்க்கீஸ் ஆகியோர் மீது பிஎன்எஸ் பிரிவு 299 (எந்த வொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்ப தன் மூலம் அவர்களின் மத உணர்வு களை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கி ழைக்கும் செயல்கள்) மற்றும் ராஜஸ் தான் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம், 2025இன் பிரிவு 3 மற்றும் 5 இன் கீழ் வழக்குப் பதிவு செய்தது. பாதிரியார் சாண்டி வர்க்கீஸ் மற்றும் அருண் ஜான் ஆகியோர் விசாரணை வளையத்தில் மட் டுமே உள்ளனர் என்றும், இது வரை யாரும் கைது செய்யப்பட வில்லை என்றும் போர்கேரா காவல் நிலையத்தின் எஸ்ஹெச்ஓ (SHO - காவல்நிலைய பொறுப்பாளர்) தேவேஷ் பரத்வாஜ் தெரிவித்தார். போலி புகார் இந்நிலையில், வீடியோ திருத் தப்பட்டு, போலி புகார் மூலம் மதமாற்ற குற்றச்சாட்டு பதியப் பட்டுள்ளது என பீர்ஷெபா தேவா லயத்தின் பாதிரியார் அருண் ஜான் “தி வயர்” செய்தியாளரிடம் கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”கடந்த 3 வரு டங்களாக, நாங்கள் ஒவ்வொரு வருடமும் “ஆத்மிக் சத்சங்கத்தை” நடத்தி வருகிறோம். நான் 13 வரு டங்களாக போர்கேராவில் வசித்து வருகிறேன். ஆனால் இதுவரை இத் தகைய பிரச்சனையை எதிர்கொண் டது இல்லை. ஆத்மிக் சத்சங்கத் தில் நாங்கள் பேசிய வீடியோக்கள் திருத்தப்பட்டு, தவறான குற்றச் சாட்டுகளுடன் மக்களிடம் பரப் பப்படுகின்றன. ஆத்மிக் சத்சங்கம் அனைவருக்கும் பொதுவானது. மதமாற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தவறான வீடி யோக்களைப் பரப்புவது முற்றி லும் தவறு” என அவர் குற்றம்சாட்டி யுள்ளார்.</p>
