தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராஜஸ்தான்: பாஜக வேட்பாளர் தோல்வியை தொடர்ந்து தெருவிளக்குகள் அகற்றம்!

2 hours before
ராஜஸ்தான்: பாஜக வேட்பாளர் தோல்வியை தொடர்ந்து தெருவிளக்குகள் அகற்றம்!
<p>ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே, கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த தெருவிளக்குகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றத் தொடங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>ராஜஸ்தானின் டோங்க் மாவட்டம், பீப்லு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வார்டு 2-இல் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா சர்மா, காங்கிரஸ் வேட்பாளர் தன்னா லாலிடம் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று மணி நேரத்திற்குள், ஜெய்ப்பூர் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் (JVVNL) மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து தெருவிளக்குகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். பாஜக வேட்பாளர் தோல்வியடைந்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக விளக்குகள் அகற்றப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.</p><p>இதற்கிடையே, முறையான அனுமதியின்றியும், அங்கீகரிக்கப்படாத மின் இணைப்புகள் மூலமும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததால் அவற்றை அகற்றியதாக விளக்கமளித்துள்ளனர். விதிகளை மீறி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தால், அப்போதே நடவடிக்கை எடுக்காத மின்வாரியம், தேர்தல் முடிவுக்குப் பிறகு மட்டும் ஏன் அகற்றுகிறது என்றும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p>பாஜக எம்எல்ஏ ராம்சஹாய் வர்மாவின் தனி உதவியாளர் அலோக் சர்மாவின் மனைவிதான் பிரியங்கா சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.