தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி ஹை-டெக் கியர்ஸ் ஆலை போராட்டம்

27 May 2026, 8:51 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி ஹை-டெக் கியர்ஸ் ஆலை போராட்டம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி ராஜஸ்தான் பிவாடி ஹை-டெக் கியர்ஸ் ஆலை போராட்டம்

உலகத்தரம் வாய்ந்த உற்பத்தித் தொழில்நுட்பமும் உழைப்பாளர்களின் துயர வாழ்க்கையும்

வேலைநிறுத்தம் 37

பிவாடி, மே 27- ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி தொழில் மண்டலத்தில் நிலவும் ஊதிய முரண்பாடுகளுக்கு எதிராக, ஆட்டோ மொபைல் உதிரிபாக நிறுவனங்களின் தொழிலாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் அடுத்தகட்டமாக, ஹை-டெக் கியர்ஸ் லிமிடெட் (Hi-Tech Gears Ltd.) ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தங்களின் உரிமைக்குரலை உயர்த்தியுள்ளனர். உலகத்தரம் வாய்ந்த மேலாண்மைத் தத்துவங்களைப் பேசும் நிறு வனங்கள், தங்களின் அடித்தள உழைப்பாளர்களான ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சொற்பக் கூலியில் சுரண்டுவதற்கு எதிராகப் பிவாடியில் வெடித்த தொழிலாளர் கொந்தளிப்பு, வடஇந்திய வாகன உற்பத்திச் சங்கிலி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த 1980-களில் ஹீரோ ஹோண்டா நிறுவனத்திற்கான பிராந்திய உதி ரிபாக விநியோகஸ்தராகத் தொடங்கி, தற்போது அமெரிக்காவின் கம்மின்ஸ் (Cummins) உள்ளிட்ட உலகளாவிய முன்னணி பிராண்டுகளுக்கு உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்யும் அள விற்கு ஹை-டெக் கியர்ஸ் நிறுவனம் வளர்ந்துள்ளது. பிவாடியில் உள்ள இவ்வாலையின் அதிநவீன ‘ECOFAC’ உற்பத்திப் பிரிவு, மெலிந்த உற்பத்தி முறை (Lean Manufacturing) மற்றும் ‘முழுமையான உற்பத்திப் பரா மரிப்பு’ (Total Productive Maintena nce - TPM) போன்ற உலகத்தரம் வாய்ந்த ஜப்பானிய தொழில்நுட்பக் கட்ட மைப்பின் கீழ் இயங்கி வருகிறது.

நவீனத் தொழில்நுட்பத்தின் நிழலில் உழைப்புச் சுரண்டல்

இந்த ஆலையில் மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் நிரந்தரத் தொழில்நுட்பப் பணியாளர்கள் என சுமார் 300 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 35,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை யிலும், இபிஎப், இஎஸ்ஐ மற்றும் மருத்துவ சலுகைகள் போன்ற சட்டப் பூர்வ பாதுகாப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆலையின் இயங்குசக்தியாக விளங்கும் சுமார் 550 ஒப்பந்தத் தொழிலாளர்கள், வெறும் 250 முதல் 300 ரூபாய் வரையிலான தினக்கூலியின் அடிப்படையில் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் குறைந்த பட்ச ஊதிய வரம்பிற்கு உட்பட்டு, இவர்களுக்கு வழங்கப்பட்ட மாத ஊதியம் வெறும் 7,700 ரூபாய் முதல் 9,400 ரூபாய் வரை மட்டுமே ஆகும். இவர்களுக்கு எவ்வித மருத்துவ விடுப்போ, பணிப் பாதுகாப்போ வழங்கப்படவில்லை. மேலும், சட்டப் பூர்வமாக இரட்டை வீத கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படாமல், கட்டாய மாக இரட்டை ஷிஃப்டுகளில் வேலை செய்யுமாறு ஒப்பந்த முகமைகளால் தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டு வந்தனர்.

எல்லையோர ஊதிய முரண்பாடும் ஏப்ரல் மாத எழுச்சியும்

சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அதீத பணவீக்கத்தால் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்த வேளையில், அண்டை மாநி லங்களான ஹரியானாவில் 35 சதவீத மும், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீத மும் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப் பட்டது பிவாடி தொழிலாளர்களைப் பெருமளவில் அதிரவைத்தது. ஒரே தொழில் மண்டலத்தில் வெறும் மாநில எல்லைக் கோடுகளைக் காட்டி, தங்க ளின் உழைப்பிற்கான கூலி பாதியாகக் குறைக்கப்படுவதை எதிர்த்து ஏப்ரல் மாத மத்தியில் பிவாடி, பத்ரேடி மற்றும் சோபங்கி தொழிற்பேட்டைகளில் பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் வீதிகளில் இறங்கினர்.

ஏப்ரல் 13 அன்று சாலைகளை முடக்கிப் போராடிய பெண் தொழி லாளர்கள் உட்படப் பல உழைப்பா ளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. இது அடுத்தடுத்த நாட்களில் நிப்பான், குமி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலாக்சோ போன்ற அண்டை ஆலை களிலும் வேலைநிறுத்தம் காட்டுத் தீயாக மாறியது. ஹை-டெக் கியர்ஸ் ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர் களும், ஐடிஐ பயிற்சிப் பணியாளர் களும் இதில் இணைந்து ‘டூல்-டவுன்’ (Tool-Down) எனப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஆலையின் உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பு கடுமையாக முடங்கியது.

முத்தரப்பு உடன்பாடும் எட்டப்பட்ட தற்காலிகத் தீர்வும்

உதிரிபாக விநியோகச் சங்கிலி முற்றிலும் முடங்குவதைத் தடுக்க, தொழிலாளர் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் அவசரமாகத் தலையிட்டு முத்தரப்புப் பேச்சு வார்த்தையை நடத்தின. இதன் விளை வாக எட்டப்பட்ட முக்கிய உடன்பாடுகள்:

வருகை ஊக்கத்தொகை (Attendance Bonus): ஒப்பந்தத் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியக் கட்டமைப்பை மாற்றி அமைத்து, மாதத்திற்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கூடுதல் வருகை ஊக்கத்தொகை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்களின் மாதக் கைத்தொகை ஊதியம் 11,000 முதல் 12,500 ரூபாயாக உயர்ந்தது.

கூடுதல் நேர ஊதியம்: இரட்டை ஷிப்ட் வேலைகள் முற்றிலும் தொழி லாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே அமைய வேண்டும் என்றும், கூடுதல் நேரப் பணிகளுக்குச் சட்டப் பூர்வமாக இரட்டை வீத ஊதியம் கணக்கிடப்பட்டு நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

பழிவாங்கல் தடுப்பு விதி: ஏப்ரல் 13 முதல் 16 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற தொழிலாளர்கள் அல்லது பயிற்சிப் பணியாளர்கள் மீது ஆலை நிர்வா கமோ அல்லது ஒப்பந்த முகமை களோ எவ்வித பழிவாங்கும் நட வடிக்கைகளோ, பணிநீக்கங்களோ அல்லது சட்டப்பூர்வ வழக்குகளோ தொடரக் கூடாது என்ற ‘பழிவாங்கல் தடுப்பு விதி’ உடன்பாட்டில் சேர்க்க ப்பட்டது. எவ்வளவுதான் மேம்பட்ட கணினிமயமாக்கப்பட்ட எந்திரங்க ளும், தானியங்கி உலைகளும் ஆலை களில் இருந்தாலும், அவற்றின் இறுதித் துல்லியம் என்பது அவற்றை இயக்கும் தொழிலாளர்களின் கைகளில்தான் உள்ளது. உழைக்கும் வர்க்கத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எந்தவொரு நவீனத் தொழில்துறைப் புரட்சியும் வெற்றியை அடைய முடியாது என்பதை இப்போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது.  தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.