முந்தய பக்கம்

கீழே கிடந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

18 Jul 2026, 9:17 pm
கீழே கிடந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
<p><strong>கீழே கிடந்த பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு</strong></p><p>இராஜபாளையம், ஜூலை 18- இராஜபாளையத்தில் சாலையில் கிடந்த பணம் மற் றும் பொருட்கள் இருந்த பர்ஸை காவல்துறையிடம் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்த்த பெண்ணுக்கு பாரா ட்டு தெரிவிக்கப்பட்டது. இராஜபாளையம் இந் திரா நகரைச் சேர்ந்த உதய குமாரின் மனைவி வேளாங் கண்ணி என்ற ஷோபனா (26), தென்றல் நகர் சாலை யில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்த போது, கீழே கிடந்த பர்ஸை கண்டெடுத்தார். அதில் உடைந்த நிலையில் ஒரு செல்போன், ஏ.டி.எம். அட்டை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்து தனது கண வர் உதயகுமாரிடம் தெரி வித்த அவர், இருவரும் வடக்கு காவல்நிலையத்தில் பர்ஸை ஒப்படைத்தனர். குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதி மேற்கொண்ட விசாரணையில், பர்ஸின் உரி மையாளர் பலராமன் என் பது தெரியவந்தது. பின்னர், அவரை வரவழைத்து பர் ஸும் அதிலிருந்த பொருட்க ளும் ஒப்படைக்கப்பட்டன. பிறரின் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மை யுடன் நடந்து கொண்ட ஷோபனா மற்றும் அவரது கணவர் உதயகுமாருக்கு காவல்துறையினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram