குப்பைகளை பாதுகாப்பாக கையாள விழிப்புணர்வு நிகழ்ச்சி
12 Jun 2026, 9:42 pm
<p><strong>குப்பைகளை பாதுகாப்பாக கையாள விழிப்புணர்வு நிகழ்ச்சி</strong></p><p>இராஜபாளையம், ஜூன் 12- இராஜபாளையம் நகராட்சி யின் சார்பில் வெள்ளிக்கிழமை யன்று இராஜபாளையம் ந.அ. அன்னப்பராஜா மேல்நிலைப் பள்ளியில் குப்பைகளை பாது காப்பான முறையில் கையாள விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இராஜபாளையம் நக ராட்சி துப்புரவு அலுவலர் பா. சக்திவேல் மற்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் தலை மை வகித்தனர். பள்ளி மாண வர்களுக்கு குப்பைகளை, ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு கழிவு என 4 வகையாக பிரித்து வைத்திடவும், மேற்படி குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாளவும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நகராட்சிப் பகுதியில் உள்ள வீடு களிலிருந்து சேகரம் செய்யப்பட்ட ஈரக்கழிவுகளிலிருந்து, நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட இயற்கை உரம் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கா.காளி, இரா.சுதாகரன், பள்ளி ஆசிரியர் கள், இராஜபாளையம் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட மேற்பார் வையாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
