விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம்: பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்'
3 Jun 2026, 10:00 pm
<p><strong>விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம்: பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்'</strong></p><p>இராஜபாளையம், ஜூன் 3- இராஜபாளையம் கிழக்கு ஒன்றி யத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்குவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராக இருந்த தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். சத்திரப்பட்டி பகுதியில் ஏராள மான விசைத்தறி கூடங்கள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில் பல தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். தொழிலாளர்கள், விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் இடையே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், முந்தைய கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் காலாவதியானது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்தனர். இதன் காரண மாக செவ்வாய்க்கிழமை சில விசைத் தறி கூடங்களில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக வேலைநிறுத்தத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் தொழிலா ளர்களை உள்ளடக்கிய மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூலி உயர்வை வலியுறுத்தி புதன்கிழமை மாலை சங்கரபாண்டியபுரம் தெற்குத் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வும், கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு படவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, விசைத்தறி உற் பத்தியாளர்கள் மற்றும் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு இடையே யும் கூலி உயர்வு ஒப்பந்தம் எட்டப்படா ததால், சிறு விசைத்தறி உற்பத்தியா ளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை காலை விசைத்தறி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் சங்கத் தலை வர் செந்தில்ராஜ் தலைமையில் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடை பெற்றது. பேச்சுவார்த்தையில், 2026 ஜூன் 1 முதல் கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த பேச்சுவார்த்தையில் சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் குருசாமி, சிஐடியு சார்பில் சக்திவேல், முனியாண்டி, எம்.ஆர்.குரு சாமி, ஏஐடியுசி சார்பில் ஆர்.பி. முத்துமாரி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பழனிவேல், தேமுதிக தொழிற் சங்கம் சார்பில் பொன்னுச்சாமி, தமி ழக வெற்றிக் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
