நூற்றாண்டு காலமாக நீர்வள ஆதாரமாக இருந்த ஊரணியை அழிக்கும் நகராட்சி நிர்வாகம்
24 Sept 2026, 8:43 pm

நூற்றாண்டு காலமாக நீர்வள ஆதாரமாக இருந்த ஊரணியை அழிக்கும் நகராட்சி நிர்வாகம்

இராஜபாளையம், செப்.24-இராஜபாளையம் ஆவரம்பட்டி கட்டபொம்மன் தெரு பகுதியில் அருள்மிகு மாயூரநாத சுவாமி கோவிலுக்குப் பாத்தியப்பட்ட ஊரணி உள்ளது. நூற்றாண்டு காலமாக இப்பகுதி மக் களின் நீராதாரமாகவும், கால் நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஊரணி இருந்து வந்தது.

இந்நிலையில், இராஜபாளையம் நகராட்சி சார்பில் ஊரணியில் குப்பைகளை கொட்டி, ஜேசிபி இயந்திரம்

மூலம் ஊரணியை மூடும் பணி நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது, ஊரணியின் கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.தற்போது ஊரணிக்கு மழைநீர் மட்டுமே வருவதாகவும், அது நிரம்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்ட நிலையிலும், ஊரணியை மூடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாயூரநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் சமூக ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய நிலையில், நகராட்சி நிர்வாகமே நீராதாரத்தை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.