சட்டவிரோத பட்டாசு திரி தொழிற்சாலை விபத்து வெளி மாநில பெண் தொழிலாளி பலி; 2 பேர் கவலைக்கிடம்
13 Jun 2026, 10:17 pm

சட்டவிரோத பட்டாசு திரி தொழிற்சாலை விபத்து வெளி மாநில பெண் தொழிலாளி பலி; 2 பேர் கவலைக்கிடம் கண்காணிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா, தளவாய் புரத்தில் ஜூன் 10ஆம் தேதி மாலை சுமார் 3:30 மணி அள வில், சட்டவிரோதமாக பட்டாசுத் திரி தயாரிக்கும் தொழிற்சா லையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய அசாமைச் சேர்ந்த சபீதிரி (51) என்ற பெண் சம்பவ இடத்திலே யே உயிரிழந்தார். மேலும் அங்கு பணிபுரிந்த அவரது மகன் சந்தீப் (23), மிராஜுல் (20) ஆகியோர் 89 சதவீ தத்திற்கு மேற்பட்ட தீக்காயங்க ளோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தொழிற்சாலைக்கு வெளியே வெல்டிங் வேலை யில் ஈடுபட்ட கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த அழகு நம்பி (18), கோடீஸ்வரன் (37) ஆகிய இருவரும் சுமார் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அழகு நம்பி கல்லூரியில் முத லாம் ஆண்டு படிக்கும் மாண வர் ஆவார். அவருடைய கல்லூரி கட்டணத்தை கட்டுவ தற்காக விடுமுறையில் தந்தை யுடன் வேலைக்கு சென்றுள் ளார். திங்கட்கிழமை கல்லூரி க்கு செல்ல வேண்டிய அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். கோடீஸ்வரன் இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.

கண்காணிக்கத் தவறிய அரசு

இத்தகைய சூழலில், தீ விபத்திற்கு பின்பு காவல் துறை, வருவாய்த்துறை விசாரித்ததில் தொழிற் சாலையின் உரிமை யாளர் இதேபோன்று சட்ட விரோதமாக மேலும் சில தொ ழிற்சாலைகளை இயக்கி வருவது கண்டறியப் பட்டது. ஜமீன் கொல்லங் கொண்டான், முறம்பு ஆகிய இடங்களில் இயங்கிய தொழிற்சாலைகளிலும் அசாமைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வந்துள்ளனர். இத்தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 50 கிலோவுக்கு மேற்பட்ட கருந்திரிகள் கைப் பற்றப்பட்டதாகத் தெரிய வரு கிறது. வெளிமாநிலத் தொழி லாளிகள் முறையாக பதிவு செய்யப்பட்டு தொழிற்சாலை களில் பணி புரிகிறார்களா என்பதை அரசு கண்கா ணிக்கத் தவறி உள்ளது.

சிஐடியு போராட்டத்தால்...

பட்டாசு விபத்தில் உயிரி ழந்தவர்களுக்கு சிஐடியு தொ ழிற்சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக உரிமையாளர்கள் சார்பில் ரூ.5 லட்சம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு ஒரு லட்சம் என வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர்த்து முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள உரி மையாளர்கள் ஜாமீன் கேட்டுச் செல்லும்போது உயிரி ழந்தவர்களுக்கு நீதி மன்றம் ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடுகிறது. இவை யெல்லாம் அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு மட்டும் பொருந்தும் என கூறுகின்ற னர். மேற்கண்ட தொழிற்சா லையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்து விட்டோம். எங்கள் கடமை முடிந்து விட்டது என அரசு அதிகாரிகள் இருந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கும், உயிருக்குப் போராடி வரு பவர்களுக்கும் நிவாரணம் வழங்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 11ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி மாலை வரை போ ராட்டத்தில் ஈடுபட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து, உயிரி ழந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சம் இழப்பீடு மற்றும் ஒரு லட்சம் இறுதிச்சடங்கிற்கு வழங்கி உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 3 பேர் 18 முதல் 23 வயதுக் குட்பட்டவர்கள். முதல மைச்சரின் நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்வதாக வட்டாட்சியர் வாக்குறுதி அளித்துள்ளார்.

சிறப்பு மருத்துவ வசதி

1. தீவிர தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் சிறப்பு மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.

2. உயிரிழந்தவர்க்கு முத லமைச்சர் நிவாரண நிதியும், நீதிமன்றம் மூலம் கிடைக்கக்கூடிய நிதியை யும் பெற்றுத்தர அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

3. காயமடைந்தவர்களுக்கு அவர்களின் காயத்தன்மை க்கு ஏற்ப, தீவிர சிகிச்சை யும், இழப்பீடும் வழங்க வேண்டும்.

4. சட்டவிரோதமாக இயங்கிய தொழிற்சாலைகளை கண் காணிக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாமைச் சேர்ந்த தாய் இறப்பு, மகன் உயிருக்குப் போராடுவது, வெளி மாநில தொழிலாளர்கள் பரித வித்தது, கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக வேலை க்குச் சென்ற மாணவன் இவர்களுக்கு ஏற்பட்ட வேதனை எனக்குள்ளும் தீயாக எரிந்து கொண்டி ருக்கிறது.

இந்த இரண்டு நாள் போராட்டத்தில் என்னுடன் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தன குமார், கிழக்கு ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, ராஜபாளையம் நகரச் செய லாளர் சுப்பிரமணி, ராஜ பாளையம் மேற்கு ஒன்றிய சிஐடியு கன்வீனர் ஆர்.எம். மாரியப்பன், இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆனந்த கண்ணன், செட்டியார்பட்டி நகரச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பி.மாரியப்பன். மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்), இராஜபாளையம்