3வது நாளாக கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்
23 Sept 2026, 10:23 pm
<p>1<strong>3வது நாளாக கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்</strong></p><p>இராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் புனல்வேலி சொசைட்டி முன்பு நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதனொரு பகுதியாக 13வது நாளாக கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், சிபிஎம் கமிட்டி உறுப்பினர் பரமேஸ்வரன் மற்றும் அழகுமுத்து, முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.</p>
