தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இராஜபாளையம் கைத்தறி நெசவாளர் பிரச்சனை, தேவதானம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை

6 Jun 2026, 10:19 pm
இராஜபாளையம் கைத்தறி நெசவாளர் பிரச்சனை, தேவதானம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை

இராஜபாளையம் கைத்தறி நெசவாளர் பிரச்சனை, தேவதானம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம்

அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் சிபிஎம் தலைவர்கள் கோரிக்கை

இராஜபாளையம், ஜூன் 6- இராஜபாளையம் சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட பல்வேறு மக்கள் பிரச்சனை களுக்கு தீர்வு காண வலியுறுத்தி, சமூக நலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இராஜபாளையம் பகுதி கைத்தறி நெச வாளர்களின் பிரச்சனைகள், தேவதானம் பகு தியில் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நெல் உலர் களம் அமைத்தல், சேத்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்றுதல், வெம்பக்கோட்டை தாலுகா ஏ.லட்சுமிபுரம் கிராமத்தில் கல் குவாரி அனுமதியை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இந்த மனுக்கள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்திற்காக கைத்தறி நெசவா ளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேலை களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்ற னர். இத்திட்டத்திற்காக வழங்கப்படும் 40 ஆம் எண் பாவு நூலின் தரம் குறைவாக இருப்ப தால் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, நெசவா ளர்களின் வருமானமும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே கூட்டுறவு சங் கங்களுக்கு தரமான நூல் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

தேவதானம் பகுதியில் விவசாயி களுக்கான நெல் உலர் களம் அமைப்ப தற்காக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டிருந்தா லும், தனிநபர் எதிர்ப்பின் காரணமாக பணி கள் இன்னும் தொடங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு திட்டத்தை உட னடியாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், கோவில், பள்ளி மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுக்கடை களை அகற்ற தமிழக அரசு உத்தர விட்டிருந்த நிலையில், சேத்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடை இன்னும் செயல்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டது.

எனவே அந்த கடையை உட னடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வெம்பக்கோட்டை தாலுகா ஏ.லட்சுமி புரம் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் பட்டாசு ஆலைகளுக்கு அருகே கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள் ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட அனு மதியைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டங்களால் பணிகள் நிறுத்தப்பட்டி ருந்த நிலையில், மீண்டும் குவாரி பணி களைத் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், இராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சந்தனகுமார், வெம்பக் கோட்டை ஒன்றியச் செயலாளர் கண்ணன், கைத்தறி சங்க நிர்வாகிகள் மருது, குரு நாதன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் வனராஜ், பால்சாமி மற்றும் ஏ.லட்சுமி புரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.