தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இராஜபாளையம் மொத்த கூட்டுறவு பண்டகசாலை சிஐடியு சங்க ஆண்டு பேரவைக் கூட்டம்

6 Jun 2026, 10:32 pm
இராஜபாளையம் மொத்த கூட்டுறவு பண்டகசாலை சிஐடியு சங்க ஆண்டு பேரவைக் கூட்டம்
<p><strong>இராஜபாளையம் மொத்த கூட்டுறவு பண்டகசாலை சிஐடியு சங்க ஆண்டு பேரவைக் கூட்டம்</strong></p><p>இராஜபாளையம், ஜூன் 6- விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யம் மொத்த கூட்டுறவு பண்டகசாலை சிஐ டியு சங்க உறுப்பினர்களின் ஆண்டு பேர வைக் கூட்டம், இராஜபாளையம் சிஐடியு அலுவலகத்தில் சங்கத் தலைவர் கே. முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட உத வித் தலைவர்கள் ஜி.கணேசன், எம்.திரு மலை, நகர சிஐடியு கன்வீனர் கே.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், கூட்டுறவு சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டு பேரவையில் வேலையறிக்கை யை உதவிச் செயலாளர் பி.தங்கராஜ் தாக் கல் செய்தார். வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் ஜி.எஸ்.சங்கரி முன்வைத் தார். பேரவையை எம்.திருமலை தொடங்கி வைத்தார். கிளைத் தலைவராக ரா.ரமேஷ், துணைத் தலைவர்களாக வி.முத்துலட்சுமி, எம்.விஷ்ணு சக்தி, செயலாளராக எம்.முரு கன், உதவிச் செயலாளர்களாக பி.தங்க ராஜ், ஜி.எஸ்.சங்கரி, பொருளாளராக ஜி. ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 13 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேரவையில், பல்வேறு தீர்மானங்க ளும் நிறைவேற்றப்பட்டன. மொத்த கூட்டு றவு பண்டகசாலை ஊழியர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு திருப்திகரமாக இல்லாததால், அதனை கூட்டுறவு பதிவாளர் மறுபரி சீலனை செய்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நியாய விலைக் கடைகளில் பாக்கெட் முறையில் பொருட்கள் விநியோகம் செய் யும் திட்டத்தை வரவேற்ற பேரவை, அதனை தமிழ்நாடு அரசு விரைந்து நடை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.