இராஜபாளையம் சிஐடியு டாக்சி வேன் ஓட்டுநர்கள் சங்க பொன்விழா! அமைச்சர் ஜெகதீஸ்வரி - அ.சவுந்தரராசன்
28 Oct 2026, 9:09 pm

இராஜபாளையம் சிஐடியு டாக்சி வேன் ஓட்டுநர்கள் சங்க பொன்விழா! அமைச்சர் ஜெகதீஸ்வரி - அ.சவுந்தரராசன் பங்கேற்பு இராஜபாளையம், அக்.28-

இராஜபாளையம் சிஐடியு டாக்சி - வேன் ஓட்டுநர்கள் சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா, இராஜபாளையத்தில் புதனன்று நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவர் ஜெ. விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவித் தலைவர்கள் தங்கவேல், மணிமாறன், உதவிச் செயலாளர்கள் செல்வம், செல்வகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே. கண்ணன் வரவேற்றார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்வி.பி.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ. சவுந்தரராசன் கருத்துரை வழங்கினார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், சாலைப் போக்குவரத்துச் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் குப்புசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் பங்கேற்ற நடனம், பாடல், சிலம்பம், யோகா மற்றும் வீர விளையாட்டுகள் நடைபெற்றன. புயல் தப்பாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், இராஜபாளையம் நகரச் செயலாளர் சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.என். தேவா, மாநிலக்குழு உறுப்பினர் கார்மேகம், சாலைப் போக்குவரத்துச் சம்மேளன மாவட்டத் தலைவர் விஜயகுமார், மாவட்டச் செயலாளர் திருமலை, சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கப் பொருளாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.