பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி; 59 பேர் காயம் சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல்
22 Jun 2026, 12:33 am
<p><strong>பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி; 59 பேர் காயம் சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல்</strong></p><p>இராஜபாளையம், ஜூன் 21- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் தாலுகாவிற்கு உட்பட்ட இளந்திரை கொண்டான் கிராமத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; 59 பேர் காய மடைந்தனர். கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த மணமகனின் உறவினர்கள், இளந்திரைகொண்டான் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 தனியார் பேருந்துகள் மற்றும் கார்களில் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து சனிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் இளந்திரை கொண்டானில் இருந்து புறப்பட்ட பேருந்து, சிறிது தூரம் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து நிலைதடுமாறி கவிழ்ந்த தாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் செல்வம் (46), காமாட்சி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 59 பேர் காயம டைந்தனர். காயமடைந்தவர்கள் இராஜ பாளையம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். அவர்களில் மூவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராமர், நகரச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் சி.பரமேஸ்வ ரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், மருத்துவ அதிகாரி உமா ஜெயபாஸ்கரிடம் காயமடைந்த வர்களுக்கு தேவையான மருத்துவ வசதி களை உறுதி செய்ய வலியுறுத்தியதுடன், வட்டாட்சியர் ராஜீவ்காந்தி மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பசினா பீவி ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவா ரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.</p>
