தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காற்றோட்டமின்றி வாடகைக் கட்டிடத்தில் அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

5 Jun 2026, 1:39 am
காற்றோட்டமின்றி வாடகைக் கட்டிடத்தில் அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

காற்றோட்டமின்றி வாடகைக் கட்டிடத்தில் அங்கன்வாடி மையங்கள் சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

இராஜபாளையம், ஜூன் 4- இராஜபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள அய்யனாபுரம் கிராமத்தில் 3 அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. அவற்றில் ஒரு மையம் மட்டுமே சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், மற்ற இரண்டு மையங்கள் வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. வாடகைக் கட்டிடங்களில் இயங் கும் அங்கன்வாடி மையங்களில் ஒன்று பழமையான மற்றும் போதிய காற்றோட் டம் இல்லாத கட்டிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் நீண்ட நேரம் அமர்ந்து கல்வி கற்க சிர மம் உள்ளது. பல ஆண்டுகளாக வாடகைக் கட்டி டத்தில் செயல்பட்டு வரும் இந்த அங் கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என குற்றம்சாட்டப்படு கிறது. தற்போது புதிய அரசு பொறுப் பேற்றுள்ள நிலையில், அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே மீண்டும் வலுப்பெற்று வருகிறது. பலமுறை அதி காரிகளின் கவனத்திற்கு இந்த பிரச் சனை கொண்டு செல்லப்பட்டும் இது வரை தீர்வு காணப்படாததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு அய்யனாபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தைத் தேர்வு செய்து, தேவையான நிதியை ஒதுக்கி, வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் இரண்டு அங்கன்வாடி மையங்க ளுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர் வாகிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.